தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 3 நாட்கள் நிகழ்ச்சியில் முதல் நாளான 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் இந்திய அரசு கலாச்சார துறை அமைச்சகத்தின் சார்பில் காரைக்கால் மாவட்டத்தைச் சார்ந்த கலைமாமணி ப. முருகன் குழுவினரின் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கருப்பண்ணசாமி, ஆட்டம் காளி ஆட்டம், புலியாட்டம், தப்பாட்டம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் நடைபெற்றது.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி அமுதா பாலமூர்த்தி, திரு தி. பெரியசாமி, திரு ஜெ. சுந்தரேசன், திரு பி. ரங்கநாதன் ஆகியோர் கலைஞர்களை கெளரவித்தனர்.
இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தென்னகப் பண்பாட்டு மையத்தின் மதிப்பிற்குரிய இயக்குனர் திரு கே கே கோபாலகிருஷ்ணன் அவர்கள் நாட்டுப்புற கலைகளை ஊக்குவித்து பாதுகாக்கும் வகையில் அவர்களது கலை குழுக்களை வெளிமாநிலங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் இன்று நமது புது தில்லியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் கலை விழாவிற்கு நாட்டுப்புற கலை குழுக்களை அனுப்பி உள்ளதற்கு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றிகளை கூறிக் கொள்கிறோம் அதுமட்டுமல்லாமல் இக்கலை நிகழ்ச்சியில் பங்குபெறும் கலைஞர்களுக்கு மத்திய அரசின் உத்தரவின்படி இயக்குனர் அவர்கள் கலைஞர்களின் ஊதியத்தினை கடந்த 2024ம் ஆண்டிலிருந்து குழுத் தலைவருக்கு ரூபாய் 1000 லிருந்து ரூபாய் 6000 மாகவும் மற்றும் இதர கலைஞர்களுக்கு ரூபாய் 800 லிருந்து 3000 மாகவும் பயண போக்குவரத்து கட்டணம் ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியிலிருந்து மூன்றாம் வகுப்பு ஏசிக்கு உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் பயணத்தின் போது கலைஞர்களுக்கு உணவு செலவினத்திற்காக ரூபாய் 400 லிருந்து 800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரியதாகும் இவ்வாறாக கலைஞர்களுக்காக உறுதுணையாக இருக்கின்ற தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் அவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
தென்னக பண்பாட்டு மையத்தின் நிர்வாக அலுவலர் திரு எம். மாரியப்பன் அவர்கள் கலைஞர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தினார்.