29.02.2020 சனிக்கிழமை அன்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர், முனைவர் கா.பா. செளந்தர்ராஜன் அவர்களின் தலைமையில் இன்றைய சூழலில் தலைநகர வாழ்க்கை சொர்க்கமா? நரகமா? என்ற தலைப்பில் மாபெரும் சிந்தனைப் பட்டிமண்டபம் நடைபெற்றது. இதில் செல்வி வீர. வியத்நாம், திரு பெ. கார்த்திகேயன், திரு ராமன் குருச்சரண் ஆகியோர் சொர்க்கமே என்ற தலைப்பிலும், திரு த.க. தமிழ்பாரதன், செல்வி அழ. வள்ளிக்கண்ணு, திருமதி கெளரி இளங்கோவன் ஆகியோர் நரகமே என்ற தலைப்பிலும் பேசினார்கள். சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆ. வெங்கடேசன், திரு எஸ். சுவாமிநாதன், திரு ஆர். கணேஷ் மற்றும் திருமதி லட்சுமி குருமூர்த்தி ஆகியோர் பேச்சாளர்களை கெளரவித்தார்கள்.