09.04.2022 சனிக்கிழமை அன்று தில்லி முத்தமிழ்ப் பேரவையுடன் தில்லித் தமிழ்ச் சங்கம் இணைந்து ‘டிவி’ வரதராஜன் குழுவினரின் ‘ஆசைக்கும் ஆஸ்திக்கும்’ என்ற நாடகம் நடைபெற்றது.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், துணைத் தலைவர் திருமதி உமா சத்தியமூர்த்தி, இணைப் பொருளாளர் திரு அருணாசலம் ‘டிவி’ வரதராஜன், குர்கான் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு சக்தி பெருமாள், ரிலையன்ஸ் குழுமத்தின் திரு ரகுராமன், மூத்த பத்திரிக்கையாளர் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நாடகத்தை துவக்கி வைத்தார்கள்.