தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 27.03.2022 அன்று பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழா தலைவர் வீ.ரெங்கநாதன், (இ.கா.ப) பணி ஓய்வு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச்செயலாளர் திரு என்.கண்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு வீ.ரெங்கநாதன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த சிறப்பு விருந்தினர் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முதலீடு வாரியம், வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் திரு மெர்வின் அலெக்சாண்டர் பேசுகையில் பத்ம விருதாளர்களை வாழ்த்திப் பேசும் போது, 130 கோடி பேர்களில் பத்ம விருது பெறுபவர்கள் வெறும் நூறு பேர் என்பதை பார்க்கும் போது இவர்களின் சாதனையை நாம் உணரலாம் என்றார். தில்லித்தமிழ்ச் சங்கத்திற்கு அஞ்சல் துறை சம்பந்தமாக எவ்வித உதவி வேண்டினும் செய்து தருவதாகவும் கூறினார்.
ஏற்புரை ஆற்றிய பத்ம விருதாளர் மருத்துவர் திரு வீராசாமி சேஷய்யா அவர்கள் நீரிழிவு நோய் என்பதை குழந்தை தாயின் கருவினிலே இருக்கும்பொழுதே, தாய்க்கு நோய் உள்ளதா என்பதை மருத்துவர் மூலம் அறிந்து கொண்டு நோய்த்தடுப்புக்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட வாழ்வியலில் உணவு குறித்த சுயக் கட்டுப்பாடுடன் கூடிய நெறிமுறைகளை பின்பற்றி வந்தாலே நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் உடலின் பிற பாகங்களான கண், சிறுநீரகம் போன்றவற்றைப் பாதுகாக்கலாம். பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த தில்லித் தமிழ்ச் சங்கத்தினர்க்கு நன்றி கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
பத்ம விருதாளர் தவில் இசைக்கலைஞர் கொங்கம்பட்டு திரு ஏ.வி.முருகையன் அவர்கள் இந்திய அரசு தவில் இசைக்கு முக்கியத்துவம் அளித்து தம்மை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி கூறியதுடன், தமக்கு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த தில்லித் தமிழ்ச் சங்க நிர்வாகத்தினர்க்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இணைச்செயலாளர் திரு ஆ.வெங்கடேசன் அவர்கள் தொகுப்புரை ஆற்றினார்.
செயற்குழு உறுப்பினர் திருமதி தேன்மொழி முத்துக்குமார் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வில் துணைத்தலைவர் திருபி.குருமூர்த்தி, இணைச்செயலாளர் திருமதி ஜோதி பெருமாள், இணைப்பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி ராமநாதன், பி.பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களைக் கௌரவித்தனர்.
அத்துடன் தில்லிவாழ் தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.