தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 26.10.2020 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளுவர் அரங்கத்தில் சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர் திரு வீ.ரெங்கநாதன், ஐ.பி.எஸ்,ஓய்வு, பொதுச் செயலாளர் திரு. என் கண்ணன், துணைத்தலைவர் திரு. பி.குருமூர்த்தி, இணைச்செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், பொருளாளர் திரு. எம்.ஆர்.பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் திரு. கே.எஸ்.முரளி, திரு. ஏ.வெங்கடேசன், திரு. பி.ஆர்.தேவநாதன், திரு. ஆர்.கணேஷ், திருமதி தேன்மொழி முத்துகுமார் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் திரு ஜி. சங்கர் மற்றும் கே.எம்.எஸ்.கலையுலக நிர்வாகத் தலைவர் திரு.கே.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சங்க கலைக்கல்வி அளிக்கும் குருவினர்க்கு திரு.நாகஜோதி (குச்சுபுடி) திரு.வெற்றிபூபதி (மிருதங்கம்) திரு.ஸ்ரீதர்(வயலின்) திரு.கந்தசாமி (தமிழ் மொழி) திருமதி லலிதா ஆனந்த் (பாடல்) திருமதி கலைவாணி ராஜ்மோகன் (பரதநாட்டியம்) திருமதி சரோஜா வைத்தியநாதன் அவர்களின் மாணவி செல்வி சுதனா சங்கர் (பரதநாட்டியம்) திருமதி கே.ஏ. கிரிஜா (வீணை) ஆகியோர்க்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பாடல், நாட்டியம், வயலின், வீணை, மிருதங்கம் என ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்களின் இசை நிகழ்ச்சியை மேடையில் அரங்கேற்றினர். இந்நிகழ்ச்சியை சங்க உறுப்பினர்கள் மற்றும் இசை ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பொதுச் செயலாளர் திரு என். கண்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். செயற்குழு உறுப்பினர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.