27.08.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தில்லி தமிழ் மெல்லிசை குழுவினரின் ”இதய ராகங்கள்” தமிழ் திரைப்பட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விமானப் படை இயக்குநர் திரு குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன், திருமதி உஷா வெங்கட், திரு தி. பெரியசாமி ஆகியோர் பாடகர்கள் திரு கிருஷ்ணமூர்த்தி, திரு ஜெ. சுந்தரேசன் மற்றும் இசைக் கலைஞர்களை கெளரவித்தார்கள்.