பன்னாட்டு தமிழ் மொழி பண்பாட்டு கழகம் சென்னை வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ் இயல் மற்றும் பண்பாட்டுப் புலம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு சென்னையில் 12.08.2023 சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பன்னாட்டு தமிழ் மொழி பண்பாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், விஜடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கோ. விஸ்வநாதன் ஆகியோர் ”வளர் தமிழ் மாமணி” விருதினை தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க, பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வேந்தர் திருவள்ளுவன் மற்றும் முன்னாள் துணைவேந்தர் திரு சுந்தரமூர்த்தி, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி உஷா வெங்கட்.