11.09.2023, திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நாளில் பாரதி நகர், ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைப் பொருளாளர் திரு திரு வி.என்.டி. மணவாளன் செயற்குழு உறுப்பினர் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.