11.12.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, திரு பி. ராமமூர்த்தி, திரு சோமாஸ்கந்தன் ஆகியோர் பாரதியின் பன்முக பரிமானங்களைப் பற்றி பேசினார்கள்.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலையின் சுற்றுப்புற பகுதிகளை புதுப்பிக்கும் பணிகளை மிகச் சிறப்பாக செய்த புதுடெல்லி மாநகர வளர்ச்சிக் கழகத்திற்கும் (என்.டி.எம்.சி) அதன் துணைத் தலைவர் திரு சதீஷ் உபாத்யாயா அவர்களுக்கு சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் நன்றியை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சங்கத்தின் இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர் திரு கே.எஸ். முரளி மற்றும் தில்லி வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
ஆயுஷ் துறையின் சார்பில் டாக்டர் சுசில்குமார் அவர்கள் சித்த மருத்துவ சூரணங்களை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.