ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்

ஆங்கிலப் புத்தாண்டு நிகழ்ச்சிகள் – 01.01.2020 – மாலை 6.00 மணி

01.01.2020 புதன்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் புத்தாண்டு நிகழ்ச்சியாக வலிவலம் ராஜேந்திரன் குழுவினரின் மங்கல இசையும், அதனைத் தொடர்ந்து  வாத்திய இசைக் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் ஜி. ரகுராமன் புல்லாங்குழலும், வி.எஸ்.கே. அண்ணாதுரை வயலினும், தில்லி ஆர். ஸ்ரீதர் வயலினும், கும்பகோணம் என். பத்மநாபன் மிருதங்கமும், தாளமணி பி. வெற்றிபூபதி மிருதங்கமும், மன்னை என். கண்ணன் கடமும், ஆதித்ய நாராயணன் கஞ்சிராவும் வாசித்தார்கள்.

சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி இராமநாதன், திருமதி டி. தேன்மொழி, திரு ஏ. வெங்கடேசன், திரு பி.ஆர். தேவநாதன், திரு ஆர். கணேஷ், திரு பி. பரமசிவம், திரு ஏ.வி. முனியப்பன், திரு ஆர். ராகேஷ், காத்திருப்பு உறுப்பினர் என். ராஜலட்சுமி ஆகியோர் கலைஞர்களை கெளரவித்தார்கள்.

உடன் முன்னாள் துணைத் தலைவர் திரு கி. பென்னேஸ்வரன், பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைச் செயலாளர் திரு எம். ஆறுமுகம், பொருளாளர் திரு எம். சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் திரு எஸ். லட்சுமணன், திரு டி. பெரியசாமி.