தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 16.01.2021 அன்று காலை 10 மணிக்கு திருவள்ளுவர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
2021 – ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக ஜூம் நேரலையில்
வலிவலம் இராஜேந்திரன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ் ச்சி திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வீ.ரெங்கநாதன் அவர்கள் குத்து விளக்கேற்றி இந்நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் என். கணணன் அவர்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை நேரலையில் தெரிவி த்தார். இணைப் பொருளாளர் இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை இணைச் செயலாளர் ஜி.என்.டி. இளங்கோவன் அவர்கள் ஒருங்கிணைத்தார். செயற்குழு உறுப்பினர்கள் திரு வெங்கடேசன்,
திரு ராகேஷ், திரு சுவாமிநாதன் மற்றும் திரு பரமசிவம் ஆ கியோர் கலந்து கொண்டனர்.



