15.08.2023 செவ்வாய்க்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில், தொலைக்காட்சிப் புகழ் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களின் தலைமையில் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படப் பெரிதும் காரணம் ஆசிரியர்களின் மதி நுட்பமா? பெருகிவரும் தொழில் நுட்பமா? என்ற தலைப்பில் தில்லித் தமிழ்க் கல்விக் கழக ஆசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் திருமதி மகாலெட்சுமி, திரு இளஞ்சோழன், திருமதி இராஜ இராஜேஸ்வரி ஆகியோர் ஆசிரியர்களின் மதி நுட்பமே என்ற தலைப்பிலும், செல்வி ஜோதி ஸ்ரீ, திருமதி இராஜேஸ்வரி, திருமதி ஜோதி பெருமாள் ஆகியோர் பெருகிவரும் தொழில் நுட்பமே என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன், திரு ஜெ. சுந்தரேசன், திரு தி. பெரியசாமி, திரு பி. ரங்கநாதன் மற்றும் திரு பி. அமிர்தலிங்கம் ஆகியோர் பேச்சாளர்களை கெளரவித்தார்கள்.