பத்ம விருதாளர்களுக்கு பாராட்டு விழா – 08.11.2021

08.11.2021 திங்கட்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்ம விருதாளர்கள் 105 வயதான, இயற்கை விவசாயத்தில் சாதனை புரிந்த திருமதி பாப்பம்மாள், பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா, அமர் சேவா சங்க நிறுவனத் தலைவர் திரு எஸ். ராமகிருஷ்ணன், ஓவியக் கலைஞர் திரு மனோகர் தேவதாஸ், கூடைப்பந்து விளையாட்டின் சாதனைப் பெண்மணி திருமதி பி. அனிதா, நாதஸ்வர கலைஞர் கலைமாமணி ஷேக் மஹபூப் சுபானி, நாதஸ்வர கலைஞர் கலைமாமணி திருமதி காலிஷாபி மஹபூப் மற்றும் திருமதி கே.எஸ். ஜெயலக்ஷ்மி ஆகியோருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

அதன் ஒலிப்பதிவு 

 

சங்கத்தின் இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் வரவேற்க, சங்கத் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இ.கா.ப (பணி நிறைவு) அவர்கள் தலைமை வகித்தார்.

தில்லி பிரதேச அரசின் போக்குவரத்து சிறப்பு ஆணையர் மற்றும் செயலர் (சேவைகள்) டாக்டர் எஸ்.பி. தீபக் குமார், இ.ஆ.ப அவர்கள் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

பட்டிமன்ற பேச்சாளர் திரு ராஜா மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சாலமன் பாப்பையா அவர்கள் தனது ஏற்புரையில் சங்க இலங்கியங்களான கம்பராமயணம், மகாபாரதம், வில்லிபாரதம் ஆகியவற்றில் இருந்து தமிழை பட்டி தொட்டிகளில் எல்லாம் கொண்டு செல்வதற்கு மிகுந்த கடின பாதையை கடந்து வந்திருக்கிறோம். பட்டிமன்றம் தொலைக்காட்சிகளில் துவங்கிய நாட்களில் பல்வேறு தரப்பினடமிருந்து மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது எனவே நாங்கள் தலைப்புகளை அப்பொழுது மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பட்டிமன்ற பேச்சாளர்கள் திரு ராஜா, திருமதி பாரதி பாஸ்கர் இவர்கள் பட்டிமன்ற குழுவில் சேர்ந்தவுடன் குடும்ப தலைப்புகளாக பட்டிமன்றத்தை நடத்தினோம். மற்ற விருதாளர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு இரா. இராகேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி ராமநாதன், திரு பி.ஆர். தேவநாதன், காத்திருப்பு உறுப்பினர் திரு பி. சங்கர் ஆகியோர் விருதாளர்களை கெளரவித்தார்கள்.