மலரஞ்சலி – 15.07.2022.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 15.07.2022 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சேனா பவன் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி நிரந்தர அழைப்பாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தெலங்கானா மாநிலப் பொறுப்பாளர் மாண்புமிகு பா. மாணிக்கம் தாகூர் எம்.பி., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன்  இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர் திருமதி தேன்மொழி முத்துக்குமார், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், மூத்த பத்திரிக்கையாளர் திரு கி. பென்னேஸ்வரன், குர்கான் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு சக்தி பெருமாள், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளர் திரு பெ. இராகவன் நாயுடு மற்றும் தில்லி வாழ் தமிழ் மக்கள் ஆர்வமுடன் பெருமளவில் பங்கேற்றனர்