29.04.2025 செவ்வாய்க்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு திருச்சி சிவா அவர்கள் தலைமையில், முன்னாள் தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர், திரு வி.ராஜாராமன் அவர்களின் சுயசரிதை நூல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமிகு திருச்சி சிவா அவர்கள் நூலை வெளியிட, பிரதிகளை முறையே, தில்லித் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு பெ.இராகவன் நாயுடு, தில்லித் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் திரு இரா.முகுந்தன், தில்லித் தமிழ்ச் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் திரு என்.கண்ணன், தில்லித் தமிழ்ச் சங்க முன்னாள் இணைச்செயலாளர் திரு பாலமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் அறவேந்தன், தில்லித் தமிழ்ச் சங்க முன்னாள் துணைத் தலைவர் திரு நாகஜோதி மற்றும் முனைவர் சோழராசா முடிமன்னன் உள்ளிட்டோர். நிகழ்ச்சியில் திருமதி ஜானகி ராஜாராமன் அவர்கள் தில்லித் தமிழ்ச் சங்க வளர்ச்சிப் பணிகளுக்கென ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.