03.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ட்ரம்ஸ் சுரேஷ்-ன் ஆகாஷ் ஷ்ருதி குழுவினரின் ஆனந்த ராகம் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், துவாரகா ஸ்ரீ ராம் மந்திரின் அறங்காவலர் திரு எம். விஸ்வநாதன், பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திரு பொன்னியன் செல்வன், சங்கத்தின் முன்னாள் பொருளாளர் திரு எம். சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா ஆகியோர் இணைப்புரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் திரு கே. சுரேஷ் டிரம்மர், பாடகர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளராகவும், திரு உதயகுமார் தபேலாவும், திரு பி.சி. அருண் கீபோர்டும், திரு மின்டால் காஜி லீட் கிடாரும், திரு சாந்தனு புல்லாங்குழலும், திரு ஸ்ரீ காந்த் பேஸ் கிடாரும், திரு எஸ். அபிஷேக் ரிதம் பேடும், வாசித்தார்கள்.
செல்வி டோரா மெல்ரோஸ், செல்வி நிகிதா ராமலிங்கம், திரு சத்தியநாதன் ஜோசப், திரு என். ராம்ஜி, செல்வி அக்ஷயா அருண், திருமதி ஜோதி பெருமாள், திருமதி ஜோதி ராமநாதன், திருமதி ராஜ்யஸ்ரீ நாராயன் ஆகியோர் பாடல்களை பாடினார்கள்.
சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் நன்றியுரை வழங்கினார். சங்கத்தின் பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், செயற்குழு உறுப்பினர் திரு ஆர். ராகேஷ் ஆகியோர் நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
சங்கத்தின் இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி ராமநாதன், திருமதி தேன்மொழி முத்துக்குமார், திரு பி.ஆர். தேவநாதன், திரு ஆர். கணேஷ், திரு எஸ். சுவாமிநாதன், திரு பி. பரமசிவம், திரு ஏ.வி. முனியப்பன் ஆகியோர் இசைக் கலைஞர்களை கெளரவித்தார்கள்.