மலரஞ்சலி – 07.08.2025

07.08.2025 வியாழக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் முத்தமிழறிஞர், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 7 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி உஷா வெங்கடேசன், திரு தி. பெரியசாமி, தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், தென்னிந்திய முன்னேற்றக் கழகத்தின் செயலர் திரு ஹரிகிருஷ்ணன், திரு பி. ராமமூர்த்தி மற்றும் திரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.