02.04.2022 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திரு எம்.ஆர். ராமசாமி அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமதி ராதிகா வெங்கடேஷ் வயலினும், திரு வி.பி. சுதிர் மிருதங்கமும் பக்கவாத்தியங்களாக வாசித்தனர். சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இ.கா.ப, (ஓய்வு), இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர் திரு ஏ.வி. முனியப்பன் ஆகியோர் இசைக் கலைஞர்களை கெளரவித்தார்கள்.