இரங்கல் கூட்டம் – 21-08-2021

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 21.08.2021 சனிக்கிழமை அன்று மாலை மறைந்த தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் தெய்வத்திரு ஜி.என்.டி. இளங்கோவன், முன்னாள் இணைச் செயலாளர் தெய்வத்திரு எம். ஆறுமுகம், முன்னாள் பொருளாளர் தெய்வத்திருமதி ஆர். கமலா ஆகியோருக்கு மெளன அஞ்சலியும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன. இடைபட்ட கொரோனா பெருந்தொற்று காலத்தில் மறைந்த சங்கத்தின் இதர உறுப்பினர்கள் தெய்வத்திரு டி.டி. குமாரசுவாமி, தெய்வத்திரு எம்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, தெய்வத்திரு பி.ஜி.எஸ். ஐயர், தெய்வத்திரு எம். முருகன், தெய்வத்திரு எஸ். நாராயணன், தெய்வத்திரு சி. கோவிந்தன், தெய்வத்திரு எஸ். சுந்தர்ராஜூ, தெய்வத்திருமதி விஷ்ணுபிரியா, தெய்வத்திரு ஆர். பார்த்தசாரதி ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அனைவரும் இணைச் செயலாளர் தெய்வத்திரு ஜி.என்.டி. இளங்கோவன், தெய்வத்திரு எம். ஆறுமுகம் உள்ளிட்ட அனைத்து சங்க உறுப்பினர்களின் மறைவும் ஈடு செய்யமுடியாத இழப்பு என்று குறிப்பிட்டனர்.

நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி ராமநாதன், திரு ஆ. வெங்கடேசன், திரு எஸ். சுவாமிநாதன், திரு ப. பரமசிவம், திரு ஏ.வி. மணி ஆகியோர் சங்க செயற்குழு சார்பாக அஞ்சலி செலுத்தினர்.

அகில இந்திய ஐ.ஒ.பி தொழிற்சங்கத் தலைவர் திரு இரா. முகுந்தன், ரசிகப்பிரியா கலாச்சார அமைப்பின் பொதுச் செயலாளர் திரு ஆர். ராமநாதன், சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு எஸ். லட்சுமணன் என்ற முகிலன், திரு ஏ. தங்கவேலு, ஐ.டி.பி.பி ஆய்வாளர் திருமதி ஜி. சித்ரா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.