11.09.2021 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மகாகவி சுப்ரமணிய பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளில் பாரதி நகர், ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லி தமிழ் அகாடமி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு தில்லி துணை முதலமைச்சர் திரு மனீஷ் சிஸோடியா, புதுடெல்லி மாநகர வளர்ச்சிக் கழக (என்.டி.எம்.சி) துணைத் தலைவர் திரு சதீஷ் உபாத்யாயா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் திரு டி. இராஜா Ex MP ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன் இ.கா.ப (ஓய்வு), துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆ. வெங்கடேசன், திரு கே.எஸ். முரளி, தில்லித் தமிழ் அகாடமியின் துணைத் தலைவர் திரு என். ராஜா, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.