தமிழக ஆளுநர் மேதகு ஆர். என். ரவி அவர்கள் வருகை

02.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் மேதகு ஆர். என். ரவி அவர்கள் வருகை புரிந்தார். சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இ.கா.ப (ஓய்வு), பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் ஆகியோர் மாண்புமிகு தமிழக ஆளுநர் மேதகு ஆர். என். ரவி அவர்களை கெளரவித்தனர்.

மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பணிகளை வெகுவாக பாராட்டினார்.

சங்கத்திலுள்ள தீரர் சத்தியமூர்த்தி நூலகத்தை பார்வையிட்டார். தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களை நூலகத்திற்கு வாங்குமாறு அறிவுறுத்தினார்.

தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் தில்லி வாழ் தமிழர்களுக்கு கொண்டு செல்லும் பணியினை தொடர்ந்து செய்யுமாறு வலியுறுத்தினார்.