06.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நினைவுகளே நினைவுகளே… என்ற தலைப்பில் சிந்துக்கவி திரு மா. சேதுராமலிங்கம் அவர்களின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பள்ளிப் படிப்பிலே! என்ற தலைப்பில் கவிதாயினி திருமதி ஜோதி பெருமாள், கல்லூரிக் காலத்திலே! என்ற தலைப்பில் கவிஞர் திரு தமிழடிமை, வாலிபப் பருவத்தினிலே! என்ற தலைப்பில் கவிஞர் திரு இரா. இராஜ்குமார் பாலா, திருமண வாழ்வினிலே! என்ற தலைப்பில் கவிதாயினி திருமதி ஸ்ரீபிரியா சம்பத், பிள்ளைப் பேற்றினிலே! என்ற தலைப்பில் கவிஞர் திரு நாக சுந்தரம் மற்றும் முதுமையின் நிழலினிலே! என்ற தலைப்பில் கவிஞர் ஜனக்புரி திரு சீனிவாசன் ஆகியோர் கவிதை வாசித்தார்கள்.
கவிஞர்களை சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இ.கா.ப (ஓய்வு), துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி ராமநாதன், திருமதி தேன்மொழி முத்துக்குமார், திரு கே.எஸ். முரளி, திரு ப. பரமசிவம் ஆகியோர் கவிஞர்களை கெளரவித்தனர்.
நிகழ்ச்சிக்கு குர்கான் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு சக்தி பெருமாள், எழுத்தாளர் திரு ஷாஜகான், முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.