காசி தமிழ்ச் சங்கமம் 2025 – 09.02.2025

09.02.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதியின் சார்பில் ”காசி தமிழ்ச் சங்கமம் 2025” நிகழ்வின் ஒரு அங்கமாக மகரிஷி அகத்தியர் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

????????????????????????????????????

இந்நிகழ்ச்சிக்கு உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பத்மஸ்ரீ சி.எஸ். வைத்தியநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

அமுதசுரபி ஆசிரியர் திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் “அகத்தியரும் மரபார்ந்த கதைகளும்” என்ற தலைப்பிலும், தொலைக்காட்சிப் புகழ் திரு பி. மணிகண்டன் அவர்கள் “அகத்தியரும் அமுத தமிழும்” என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்கள்.

சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், பொருளாளர் திரு எஸ். அருணாசலம் ஆகியோர் பேச்சாளர்களையும், பத்மஸ்ரீ சி.எஸ். வைத்தியநாதன் அவர்களையும் கெளரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் கலைச்செல்வி, கல்வி அமைச்சகத்தின் அலுவலர்கள் திரு ஸ்ரீபதி, திரு செளந்தர்ராஜன், சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் திரு பி. ரங்கநாதன், திரு ஜெ. சுந்தரேசன், காத்திருப்பு உறுப்பினர் திருமதி ரேவதி ராஜன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.