
அன்புடையீர் !
வணக்கம். தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு இம்மாதம் 25, 26 நாட்களில் வருகை தரும் சென்னை தமிழரசன் தியேட்டர்ஸ் குழுவினர் ஏற்கனவே சங்கத்தில் திருவள்ளுவர், நரசிம்மர் என இரு சரித்திர, புராண நாடகங்களை அரங்கேற்றிய பெருமை மிக்கவர்கள்.
இந்நாடக குழுவை நடத்தி வரும் கலைமாமணி கே பி அறிவானந்தம், தமிழ் மாமணி பாலசுந்தரம் ஆகியோர் பல சரித்திர, சமூக நாடகங்களை இயக்கியுள்ளனர். பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ளதுடன் பல தொலைக்காட்சி தொடர்கள், சொற்பொழிவுகள் நடத்தி விருதுகளை வாங்கி குவித்துள்ளனர்.
25.11.2023 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ”தெய்வச் சேக்கிழார்” நாடகம் 63 நாயன்மார்களின் வரலாற்றை சேக்கிழாரின் பாணியிலேயே அற்புதமாக, தத்ரூபமாக காட்டியுள்ளது. 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் ”சூரபத்மன்” நாடகம் சூரபத்மன் என்ற அசுரன் முருகனுக்கு மயில் ஆகவும் சேவலாகவும் அமையும் பாக்கியம் எப்படி கிடைத்தது என்பதை சுவைபட பக்தியுணர்வுடன் காட்டியுள்ளது. இரு நாடகங்களும் மிக பிரம்மாண்டமான சீன் செட்டுகளும், தந்திர காட்சிகளும், கருத்தாழமிக்க வசனங்களும், அற்புதமான நடிப்பும், இனிமையான பாடல்களும் கொண்டு தலைநகர்வாழ் மக்களின் கண்ணுக்கும் செவிக்கும் இனிய விருந்தளிக்கும் என்பதில் ஐயமில்லை.
நம்மில் பலருக்கு பல்வேறு காரணங்களினால் பண்டைய இலக்கியங்களையும், புராணங்களையும், படிப்பதற்கும், குழந்தைகளுக்கு விளக்கிக் கூறுவதற்கும் நேரமின்றி உள்ளது. உங்களது ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வண்ணம் உங்களுக்காகவே இவற்றை அடுத்த முறையினருக்கு எடுத்துக் கூறுவதே இந்நாடகங்களின் நோக்கமாகும்.
எனவே இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மேலும் தலைநகர்வாழ் தமிழர்கள் அனைவரும் குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடன் சங்கத்திற்கு வந்து நாடகங்களை கண்டு களித்து முத்தமிழில் ஒன்றான பழந்தமிழ் நாடகக் கலையை பேணிக்காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.





இன்று : 84
நேற்று : 0
திங்கள் : 84
ஆண்டு : 23279
இதுவரை : 222153