பாராட்டு விழா – 06.04.2025

06.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் பங்கேற்புடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவர் டாக்டர் வி. நாராயணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஆர்.கே. புரம் சட்டமன்ற உறுப்பினர் திரு அனில் குமார் சர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி திரு வீராணம் சு. முருகன் அவர்கள் அறிமுகவுரையாற்றினார்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் திரு ஆர்.கே. ராமன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

சங்கத்தின் பொருளாளர் திரு எஸ். அருணாசலம் அவர்கள் நன்றியுரையாற்றினார், சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.