கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி – 15-08-202 15.08.2020 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் வழங்கப்பட்டது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் இந்தியாவும் போராடி வரும் நிலையில், தமிழக மக்களை காக்க தமிழ்நாடு அரசும் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், மாண்புமிகு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரவீந்திரநாத் குமார், எம்.பி, அவர்களும் தனிப்பட்டமுறையில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு நாடுகள், மாநிலங்களிலிருந்து பலதரப்பட்டவர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை உடனடியாக கனிவுடன் கவனித்து இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பொட்டலங்களையும் பலருக்கு வழங்கியுள்ளார்கள். இந்நிலையில், தில்லித் தமிழ்ச் சங்கத்தினர் தில்லிவாழ் தமிழக மக்களுக்கும், தமிழக முன்களப் பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் வேண்டி கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரவீந்திரநாத் குமார், எம்.பி, ஆகியோரின் கவனத்திற்கு வந்ததும் உடனடியாக 25000 கபசுரக்குடிநீர் சூரண தொகுப்புகளை விமானம் மூலம் டில்லிக்கு அனுப்பி வைத்து நமக்கு மகத்தான உதவி புரிந்துள்ளார்கள். அவர்களுக்கு டில்லி வாழ் தமிழர்கள் சார்பிலும், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன் ஐ.பி.எஸ் (ஓய்வு), பொதுச் செயலாளர் திரு என். கண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.









இன்று : 35
நேற்று : 0
திங்கள் : 35
ஆண்டு : 23230
இதுவரை : 222104